நேரு பற்றிய பேச்சு போட்டி Tamil

❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp
REPORT THIS PDF ⚐

நேரு பற்றிய பேச்சு போட்டி Tamil

சவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889 – மே 27, 1964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.

இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசுக் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் குடியரசு இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.

நேரு பற்றிய பேச்சு போட்டி

  • பண்டிட் ஜவர்ஹலால் 1889, நவம்பர் 14ம் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார்.அவருடைய சிறு வயதில் அவர் வீட்டிலிருந்தே கல்வி பயின்றார். தனது 15 வது வயதில் இங்கிலாந்து சென்ற அவர், ஹரோவின் இரண்டு ஆண்டுகள் கழிந்த பின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் கல்வி பயின்றார்.
  • பிறகு அவருக்கு பார்-ல் இணையுமாறு இன்னர் டெம்பிலில் இருந்து அழைப்பு வந்தது. 1912ல் இந்தியாவிற்கு திரும்பிய அவர் நேரடியாக அரசியலில் நுழைந்தார்.
  • மாணவராக இருந்த காலத்திலிருந்தே அயல் நாட்டின் பிடியில் இருந்து பாதிக்கப்பட்டு விடுதலைக்காக போராடுகின்ற தேசங்கள் மீது அவர் ஆர்வம் காட்டி வந்தார். அயர்லாந்தின் சின் பியன் இயக்கத்தில் அவர் அதிக ஆர்வம் காட்டினார்.
  • இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் அவர் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து போராடினார். 1912ல் பங்கிபோர் காங்கிரஸ் மாநாட்டில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.1919ல் அலகாபாத்தில் ஹோம் ருல் லீக்கின் செயலர் ஆனார். 1916ல் மகாத்மா காந்தியை முதன் முதலில் அவர் சந்தித்தார்.
  • முதல் சந்திப்பின் போதே அவர் மகாத்மா காந்தியால் அவர் வெகுவாக ஈர்க்கப்பட்டார். 1920-ல் உத்திர பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் முதல் கிஸ்ஸான் யாத்திரையை மேற்கொண்டார்.
  • 1920 முதல் 1922 வரை ஒத்துழையாமை இயக்கத்திற்காக அவர் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார்.
  • பண்டிட் நேரு 1923 செப்டம்பர் மாதம், அனைத்து இந்திய காங்கிரஸ் குழுவின் பொது செயலரானார். 1926ல் இத்தாலி, சுவிஸ்சர்லாந்த், இங்கிலாந்த், பெல்ஜியம், ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
  • இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதியாக பெல்ஜியம் புரூசல் பகுதியில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட நாடுகளின் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். 1927 ல் மாஸ்கோவில் நடைபெற்ற அக்டோபர் சோஷியலிஸ்ட் புரட்சியின் 10வது ஆண்டு விழாவில் அவர் கலந்துக்கொண்டார்.
  • 1926-ல் மெட்ராஸ் காங்கிரஸ் மாநாட்டில் ஈடுபடுவதற்கு விடுதலை போராட்டத்தில் நேரு தூண்டுகோலாக இருந்தார். 1928ல் சைமன் கமிஷனுக்கு எதிராக நடைபெற்ற ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கியதால் காவலர்கள் அவர் மீது தடியடி நடத்தினார்.
  • 1928, ஆகஸ்ட் 29 அவர் அனைத்து கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டார். அவர் தந்தை திரு.
  • மோதிலால் நேருவின் பெயரில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நேருவின் அறிக்கையில் முக்கிய பங்குவகித்தார்.
  • அதே ஆண்டில், இந்தியாவுடனான ஆங்கிலேயரின் இணைப்பை துண்டித்து “சுதந்திர இந்தியா” என்ற அமைப்பை அவர் நிறுவினார். பின்பு அதன் பொது செயலராகவும் பொறுப்பேற்றார்.
  • நாட்டிற்கு சுதந்திரம் பெருவதையே நோக்கமாக கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் லாகூர் அவையின் 1929ம் ஆண்டு தலைவராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சத்தியாகிரகம் மற்றும் காங்கிரசால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றதற்காக 1930 முதல் 1935 அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1935, பிப்ரவரி 14ம் தேதி அல்மோரா சிறையில் அவர் தனது சுயசரிதையை எழுதி முடித்தார்.
  • சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபின் 1936, பிப்ரவரி மார்ச் மாதம் லண்டனில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரது மனைவியை சந்திக்க சென்றார்.
  • நாட்டில் உள்நாட்டு போர் ஆரம்ப நிலையிலிருந்தபோது அவர் ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொண்டார். இரண்டாவது உலகப் போர் துவங்கும் முன் அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
  • பண்டிட் நேரு, அக்டோபர் 31, 1940ல் இந்தியாவை வலுகட்டாயமாக உலக போரில் பங்கேற்க வைப்பதை கண்டித்து தனிநபராக அவர் சத்தியாகிரகம் மேற்கொண்டபோது கைதுசெய்யப்பட்டார். 1941 டிசம்பரில் மற்ற தலைவர்களுடன் இவரும் விடுதலை செய்யப்பட்டார்.
  • ஆகஸ்ட் 7, 1942 ல் வரலாறு சிறப்புமிக்க “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்திற்கான தீர்மானத்தை மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழுவில் முன்மொழிந்தார்.
  • ஆகஸ்ட் 8, 1942ல் மற்ற தலைவர்களுடன் இவரும் கைது செய்யப்பட்டு அகமத் நகர் கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுவே இவருடைய இறுதியான மற்றும் நீண்டகால சிறைவாசமாகும். இதே போன்று இவர் 9 முறை கைது செய்யப்பட்டார்.
  • ஜனவரி 1945 ல் அவர் விடுதலைச் செய்யப்பட்ட பிறகு துரோகம் இழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கும் இந்திய தேசிய இராணுவ படையினருக்கும் அவர் சட்ட ரீதியாக கையாள ஏற்பாடு செய்தார்.
  • மார்ச் 1946ல் பண்டிட் நேரு தெற்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். ஜூலை 6, 1946 நான்காவது முறை காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1951 முதல் 1954 வரை மீண்டும் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்வரும் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நேரு பற்றிய பேச்சு போட்டி PDF ஐ பதிவிறக்கம் செய்யலாம்.

நேரு பற்றிய பேச்சு போட்டி PDF Free Download

REPORT THISIf the purchase / download link of நேரு பற்றிய பேச்சு போட்டி PDF is not working or you feel any other problem with it, please REPORT IT by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If this is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.