Rent Agreement Tamil - Summary
The rent agreement is a crucial legal document that is signed by both the lessee and lessor, affirming their acceptance of the terms set by the landlord. This agreement holds legal authority and can be used in courts if there is a dispute. It’s important to note that the rental agreement should be printed on Non-Judicial Stamp Paper valued at Rs. 100/- or more.
Typically, the landlord will retain the original rental agreement. Tenants can always request a copy from the landlord. Both parties, that is, the tenant and the landlord, can sign a photocopy of the rental agreement.
Understanding the Rent Agreement in Tamil
Rent Agreement in Tamil
மேற்சொன்ன 1வது பார்ட்டிக்குச் சொந்தமான 23 சேதுபதி நகர், chennai முதல் தளத்தில் அமைந்துள்ள வீட்டினை நம்மில் 2வது பார்ட்டி
குடியிருப்பதற்காக வேண்டி 1வது பார்ட்டியினை அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு 1வது பார்ட்டி, 2வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு
கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர்.
ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்
- 1. நம்மில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மாத வாடகையாய் ரூபாய் ———————(ரூபாய் ——————————————————————————————————————————)
பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது. - 2. 1வது பார்ட்டியிடம் 2வது பார்ட்டி இன்று —————————————————– ரூபாய் ——————————————————– மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படி
தொகையை நம்மில் 2வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும் போது 1வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்கு
வட்டி ஏதும் கிடையாது. - 3. 1வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டினை காலி செய்யும் சமயத்தில் சேதமில்லாமல் ஒப்படைக்க வேண்டும். மேற்படி வீட்டில் ஏதாவது சேதம் இருந்தால் 1வது பார்ட்டி அட்வான்ஸ் தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2வது பார்ட்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.
- 4. 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர் அளவுப்படி மின்சார அலுவலகத்தில் தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.
- 5. 2 வது பார்ட்டி பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டணம் மற்றும் தண்ணீர் போன்றவற்றிக்கு ரூபாய் ————- பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்தால் நல்லது.
- 6. இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 11 மாத காலக் கொடுவிற்கு உட்பட்டது. அதாவது ————————- தேதி முதல் ——————————- தேதி வரையிலான 11 மாதக் காலத்திற்கு உட்பட்டது.
- 7. 11 மாத காலக் கெடுவிற்குள் 1வது பார்ட்டிக்கு வீடு தேவைப்பட்டால், 2வது பார்ட்டியின் 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 2 மாத முன்னறிவிப்புகொடுத்து விட்டு காலி செய்ய வேண்டும்.
- 8. மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 11 மாத காலம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.
- 9. 2வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைத் தவிர வேறு எந்த விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.
- 10. 2வது பார்ட்டி மேற்படி வீட்டை வேற்றொன்றுக்கு மேல் வாடகைக்கு விடக்கூடாது.
- 11. 2வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத் தவறினால், மேற்படி வீட்டை காலி செய்ய 1வது பார்ட்டிக்கும் உரிமையுண்டு. இது போல, நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்.
Download the Rent Agreement PDF for clear guidelines and more details on the topic. Do not miss the chance to download the Rent Agreement PDF today! 📄