IPC Sections List (கிரிமினல் சட்டம்) Tamil

❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp
REPORT THIS PDF ⚐

IPC Sections List (கிரிமினல் சட்டம்) Tamil

The Indian Penal Code of 1860, subdivided into 23 chapters, comprises 511 sections. The Code starts with an introduction, provides explanations and exceptions used in it, and covers a wide range of offenses.

The objective of this Act is to provide a general penal code for India. Though not the initial objective, the Act does not repeal the penal laws which were in force at the time of coming into force in India. This was done because the Code does not contain all the offenses, and some offenses might have still been left out of the Code, which was not intended to be exempted from penal consequences. Though this Code consolidates the whole of the law on the subject and is exhaustive on the matters in respect of which it declares the law, many more penal statutes governing various offenses have been created in addition to the code.

IPC Section List in Tamil (கிரிமினல் சட்டம்)

  • ஐபிசி பிரிவு 1 – பெயரும் எல்லையும்
  • ஐபிசி பிரிவு 2 – இந்திய எல்லைக்குள் நடைபெறும் குற்றங்களுக்கு தண்டனை
  • ஐபிசி பிரிவு 3 – வெளி நாடுகளில் செய்யப்பட்ட குற்றங்கள்
  • ஐபிசி பிரிவு 4 – கூடுதல் பிரதேச குற்றங்கள் கோட் நீட்டிப்பு.
  • ஐபிசி பிரிவு 5 – இந்த சட்டத்தால் பாதிக்கப்பட முடியாத சில சட்டங்கள்.
  • ஐபிசி பிரிவு 6 – விதிவிலக்குகளுக்கு உட்பட்ட சட்டத்தொகுப்பு
  • ஐபிசி பிரிவு 7 – ஒருமுறை விளக்கப்பட்ட வெளிப்பாட்டின் பொருள்
  • ஐபிசி பிரிவு 8 – -அவன் (ர்)-
  • ஐபிசி பிரிவு 9 – (Number)
  • ஐபிசி பிரிவு 10 – ஆண், பெண்
  • ஐபிசி பிரிவு 11 – -நபர்-
  • ஐபிசி பிரிவு 12 – -பொதுமக்கள்-
  • ஐபிசி பிரிவு 13 – ராணி- (தவிர்க்கப்பட்டன)
  • ஐபிசி பிரிவு 14 – அரசு ஊழியர்-
  • ஐபிசி பிரிவு 15 – பிரிட்டிஷ் இந்தியா(நீக்கியது)
  • ஐபிசி பிரிவு 16 – இந்திய அரசு (நீக்கியது)
  • ஐபிசி பிரிவு 17 – -அரசு-
  • ஐபிசி பிரிவு 18 – -இந்தியா-
  • ஐபிசி பிரிவு 19 – -நீதிபதி-
  • ஐபிசி பிரிவு 20 – நீதி மன்றம்
  • ஐபிசி பிரிவு 21 – பொது ஊழியர்
  • ஐபிசி பிரிவு 22 – அசையும் பொருட்கள்
  • ஐபிசி பிரிவு 23 – முறையற்ற ஆதாயம்
  • ஐபிசி பிரிவு 24 – நேர்மையின்மை
  • ஐபிசி பிரிவு 25 – மோசடி
  • ஐபிசி பிரிவு 26 – நம்பத்தகுந்த காரணம்
  • ஐபிசி பிரிவு 27 – மனைவி, குமாஸ்தா அல்லது வேலைக்காரனிடம் உள்ள சொத்து
  • ஐபிசி பிரிவு 28 – போலியாகச் செய்தல்
  • ஐபிசி பிரிவு 29 – ஆவணம்
  • ஐபிசி பிரிவு 30 – மதிப்புமிக்க பாதுகாப்பு
  • ஐபிசி பிரிவு 31 – உயில்
  • ஐபிசி பிரிவு 32 – சட்டவிரோத விலக்குகள்.
  • ஐபிசி பிரிவு 33 – செயல் செய்யாது இருத்தல்
  • ஐபிசி பிரிவு 34 – கூட்டு நோக்கம்
  • ஐபிசி பிரிவு 35 – எப்போது, அத்தகைய ஒரு செயல் ஒரு குற்றமுறு தெரிதலுடன் அல்லது உள்நோக்கத்துடன் அது செய்யப்பட்ட காரணத்தால் குற்றமாகிறது
    ஐபிசி பிரிவு 36 – பகுதியளவு செயலினால் மற்றும் பகுதியளவு செய்வன செய்யாமையால் ஏற்படுத்தப்பட்ட விளைவு
  • ஐபிசி பிரிவு 37 – ஒரு குற்றமாக அமைகிற பல்வேறு செயல்களில் ஒன்றைச் செய்வதால் ஒத்துழைத்தல்
  • ஐபிசி பிரிவு 38 – குற்றமுறு செயலில் சம்பந்தப்பட்டிருக்கிற நபர்கள், வௌ;வேறான குற்றங்களுக்கு குற்றவாளிகள் ஆகலாம்
  • ஐபிசி பிரிவு 39 – தன்னிச்சைப்படி
  • ஐபிசி பிரிவு 40 – குற்றம்
  • ஐபிசி பிரிவு 41 – சிறப்பு சட்டம்
  • ஐபிசி பிரிவு 42 – உள்ளூர் சட்டம்
  • ஐபிசி பிரிவு 43 – “சட்டவிரோத”, “சட்டபூர்வமாக செய்ய வேண்டியது”.
  • ஐபிசி பிரிவு 44 – தீங்கு
  • ஐபிசி பிரிவு 45 – உயிர்
  • ஐபிசி பிரிவு 46 – மரணம்
  • ஐபிசி பிரிவு 47 – விலங்கு
  • ஐபிசி பிரிவு 48 – கலம்
  • ஐபிசி பிரிவு 49 – வருடம், மாதம்
  • ஐபிசி பிரிவு 50 – சட்டப்பிரிவு
  • ஐபிசி பிரிவு 51 – சத்திய பிரமாணம்
  • ஐபிசி பிரிவு 52 – நல்லெண்ணம்
  • ஐபிசி பிரிவு 52A – புகலிடமளித்தல்
  • ஐபிசி பிரிவு 53 – தண்டனைகள்.
  • ஐபிசி பிரிவு 53A – நாடு கடத்தலுக்குப் பொருள் விளக்கம்
  • ஐபிசி பிரிவு 54 – மரண தண்டனைவிதிப்பைக் குறைத்தல்
  • ஐபிசி பிரிவு 55 – வாழ்க்கைக்கு சிறைத் தண்டனை
  • ஐபிசி பிரிவு 55A – “உரிய அரசாங்கத்தின்” பொருள் வரையறை
  • ஐபிசி பிரிவு 56 – ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் அடிமைத்தன வேலைவாங்கும் தண்டனைவிதிப்பு பத்து வருடங்களுக்கு மேற்பட்ட ஆனால் ஆயுள் வரை நீட்டிக்கப்படாத கால அளவிலான தண்டனை விதிப்பிற்கான விலக்கு
  • ஐபிசி பிரிவு 57 – தண்டனை கால அளவுகளின் பகுதிகள்
  • ஐபிசி பிரிவு 58 – [நீக்கியது]
  • ஐபிசி பிரிவு 59 – [நீக்கியது]
  • ஐபிசி பிரிவு 60 – தண்டனைவிதிப்பானது (சிறைத்தண்டனையின் குறிப்பிட்ட நேர்வுகளில்) முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ கடுங்காவல் அல்லது சாதாரணமாக இருக்கலாம்
  • ஐபிசி பிரிவு 61 – [நீக்கியது]
  • ஐபிசி பிரிவு 62 – [நீக்கியது]
  • ஐபிசி பிரிவு 63 – அபராதத்தொகை
  • ஐபிசி பிரிவு 64 – அபராதம் செலுத்தப்படாததற்கான சிறைத்தண்டனைவிதிப்பு
  • ஐபிசி பிரிவு 65 – அபராதத் தொகையை செலுத்துவதற்கு சிறைதண்டனை வரம்புக்குட்பட்டது
  • ஐபிசி பிரிவு 66 – அபராதம் செலுத்தப்படாததற்கான சிறைத்தண்டனையின் வகை
  • ஐபிசி பிரிவு 67 – அபராதம் மட்டுமே உள்ள தண்டனைக்கு, அபராதம் செலுத்தப்படாதபோது செய்யப்படும் சிறைத்தண்டனை
  • ஐபிசி பிரிவு 68 – அபராதம் செலுத்தப்படுகையில் முடிவிற்கு வரும் சிறைத்தண்டனை
  • ஐபிசி பிரிவு 69 – அபராதப் பகுதியின் சமஅளவு செலுத்தப்படுகையில் முடிவிற்கு வரும் சிறைத்தண்டனை
  • ஐபிசி பிரிவு 70 – ஆறு வருடங்களுக்குள், அல்லது சிறைத்தண்டனையின்போது அபராதம் வசூலிக்கத்தக்கது மரணம், சொத்தை வசூலிக்கப்படுவதற்கு உள்ளாவதிலிருந்து விடுவிக்காது
  • ஐபிசி பிரிவு 71 – பல குற்றங்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டதற்கு தண்டனை வரம்பு.
  • ஐபிசி பிரிவு 72 – பல்வேறு குற்றங்களில் எந்நக் குற்றத்திற்கு குற்றவாளி என சந்தேகமாக இருப்பதாக தீர்ப்புரை தெரிவிக்கையில் அக்குற்றங்களில் ஒன்றிற்குக் குற்றவாளியாகும் நபருக்குத்தண்டனை
  • ஐபிசி பிரிவு 73 – தனிமைச் சிறைவைப்பு
  • ஐபிசி பிரிவு 74 – தனிச் சிறைச்சாலையின் வரம்பு.
  • ஐபிசி பிரிவு 75 – முந்தைய தண்டனைக்குப் பின்னர் அத்தியாயம் XII அல்லது அத்தியாயம் XVII இன் கீழ் சில குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
  • ஐபிசி பிரிவு 76 – குற்றம், குற்றமாகாது சந்தர்ப்பங்கள்
  • ஐபிசி பிரிவு 77 – சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவரை நீதிபதி தண்டிக்கிறார். தனக்கு ஒரு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற நல்லெண்ணத்துடன் தண்டனை கொடுக்கலாம். அதற்காக அந்த நீதிபதியை குற்றம்சாட்ட
  • ஐபிசி பிரிவு 78 – ஒரு உத்திரவு அல்லது தீர்ப்பு நீதிமன்றத்தால் வெளியிடப்படுகிறது. அந்த தீர்ப்பு அல்லது உத்திரவு அமலில் இருக்கும்போது அதனை ஒட்டி செய்யப்படும் காரியங்கள் குற்றம் என்று கொள்ள அதிகாரம் கூட இல்லாதிருக்கலாம்.
  • ஐபிசி பிரிவு 79 – சட்டத்தின் கீழ் உரிமைப்பெற்று கடமையாற்றுவோர் நல்லெண்ணத்துடன் தவறுதலாக ஒரு காரியத்தை சரியானது என்று எண்ணி குற்றம் புரிந்திருந்தால் அதுவும் குற்றமாகாது.
  • ஐபிசி பிரிவு 80 – சட்ட ரீதியான முறையில் சட்ட ரீதியான வழிகளைப் பற்றி சட்டத்திற்கு உட்பட்ட ஒரு காரியம் கருத்துடனும் கவனத்துடனும் நடைபெறுகின்றது. அப்படி காரியம் ஆகும்போது குற்ற கருத்தும் குற்றத்தைப்பற்றி தெளிவும் இல்லாமல்
  • ஐபிசி பிரிவு 81 – ஒருவருக்கு தீங்கு இழைக்க வேண்டும் என்ற குற்ற கருத்து இல்லாமல், நல்லெண்ணத்துடன் ஒரு மனிதர் அல்லது சொத்துக்கு தீங்கு ஏற்படுவதை தடுக்க அல்லது தவிக்க ஒரு காரியம் நடைபெறுகிறது. அப்போது தீங்கு ஏற்படும் என
  • ஐபிசி பிரிவு 82 – 7 வயதுக்குட்பட்ட குழந்தை எந்த காரியத்தை செய்தாலும் அது குற்றம் ஆகாது.
  • ஐபிசி பிரிவு 83 – தன்னுடைய நடவடிக்கைகளின் காரண காரியங்களை புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அறிவு முதிர்ச்சி பெறாத 7 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செய்வதை குற்றம் என்று கொள்ள முடியாது.
  • ஐபிசி பிரிவு 84 – சித்தசுவாதீனமற்ற நிலையில் தான் செய்வது என்னவென்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் ஒருவர் புரியும் செயல் குற்றமாகாது.
  • ஐபிசி பிரிவு 85 – மது போதை ஊட்டப்பட்ட ஒருவர் தான் செய்வதை இன்னதென்று பகுத்தறிய முடியாத சூழ்நிலையில் செய்யக்கூடிய எதனையும் குற்றமாக கொள்ள முடியாது. ஏனெனில் தான் செய்யும் காரியம் சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது சட்டத்திற்க
  • ஐபிசி பிரிவு 86 – மதுமயக்கத்திலிருக்கும் ஒருவரால் புரியப்பட்ட ஒரு குறிப்பிட்ட உள்நோக்கம் அல்லது தெரிதல் தேவைபடுகின்ற குற்றம்
  • ஐபிசி பிரிவு 87 – மரணம் அல்லது கொடுங்காயத்தை விளைவிக்க எண்ணப்படாத மற்றும்அனேகமாக விளைவிக்கும் எனத் தெரியா சம்மந்தத்தால் செய்யப்பட்ட செயல்.
  • ஐபிசி பிரிவு 88 – மரணத்தை விளைவிக்க எண்ணப்படாத நபருடைய நலனுக்காக நன்னம்பிக்கையில் சம்மத்ததால் செய்யப்பட்ட செயல்
  • ஐபிசி பிரிவு 89 – காப்பாளரால் அல்லது காப்பாளரின் சம்மத்தால், குழந்தை அல்லது மனநலம் குன்றிய நபரின் நலனுக்காக நன்னம்பிக்கையில் செய்யப்பட்டசெயல்
  • ஐபிசி பிரிவு 90 – பயம் அல்லது தவறான எண்ணத்தின் கீழ் கொடுக்கப்பட்டதாகத் தெரியும் சம்மதம்
  • ஐபிசி பிரிவு 91 – எச்செயல்கள் தீங்கு விளைவிக்கப்பட்டதற்குத் தனியாகவோ குற்றங்களாகுமோ அச்செயல்களின் நீக்கம்
  • ஐபிசி பிரிவு 92 – சம்மதமின்றி ஒரு நபரின் நலனுக்காக நன்னம்பிக்கையில் செய்யப்பட்ட செயல்
  • ஐபிசி பிரிவு 93 – நன்னம்பிக்கையில் தெரிவிக்கப்ட்ட தகவல்
  • ஐபிசி பிரிவு 94 – எந்தவொரு செயலுக்கு அச்சுறுத்தல்களால் ஒரு நபர் கட்டாயப்படுத்தப்பட்டாரோ அச்செயல்
  • ஐபிசி பிரிவு 95 – மிகச்சிறிய தீங்கை விளைவிக்கிற செயல்
  • ஐபிசி பிரிவு 96 – சில நேரங்களில் நம்மை பிறரிடமிருந்து காப்பாற்றி கொள்வதற்காக சில காரியங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் பிறருக்கு தீங்கு கூட ஏற்படலாம். அந்த தீங்கு சொத்துக்கு நஷ்டம் உண்டாக்குவதற்காகவோ உடலுக்கு காயம
  • ஐபிசி பிரிவு 97 – உடலையும், உடைமையும் தற்காத்து கொள்ளும் உரிமை
  • ஐபிசி பிரிவு 98 – திறமையின் காரணமாகவும் அறிவு தெளிவடையாத காரணத்தாலும் புத்தி சுவாதீனமில்லாததாலும், போதையின் விளைவாகவும் ஒருவர் புரியும் குற்றச்செயலை குற்றமாக கருத இயலாவிட்டாலும் அத்தகைய நபர்களிடமிருந்து, நம்மை காப்பா
  • ஐபிசி பிரிவு 99 – தற்காப்புரிமை இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள்
  • ஐபிசி பிரிவு 100 – தற்காப்பு உரிமையைப் பயன்பதுதும் காலத்து இறப்பு ஏற்படும் சந்தர்ப்பங்கள்
  • ஐபிசி பிரிவு 101 – அத்தகைய உரிமை, மரணம் அல்லாத ஏதாவதொரு பிற தீங்கை விளைவிப்பதற்கு எப்போது நீட்டிக்கிறது
  • ஐபிசி பிரிவு 102 – தற்காப்பு உரிமை ஆரம்பிக்கும் மற்றும் நீடிக்கும் காலம்
  • ஐபிசி பிரிவு 103 – சொத்துக்கு அழிவு ஏற்படும்போது தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் மரணம் ஏற்படும் சந்தர்ப்பங்கள்
  • ஐபிசி பிரிவு 104 – சொத்துக்கு அழிவு ஏற்படும்போது தற்காப்புரிமையைப் பயன்படுத்துவதால் மரணம் ஏற்படக்கூடாத சந்தர்ப்பங்கள்
  • ஐபிசி பிரிவு 105 – சொத்துக்கு தற்காப்புரிமை ஏற்படும் மற்றும் நீடிக்கும் காலம்
  • ஐபிசி பிரிவு 106 – தற்காப்பு உரிமையை கையாளும் போது நம் அருகில் இருப்பவருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 107 – குற்ற உடந்தை
  • ஐபிசி பிரிவு 108 – தூண்டுபவர்
  • ஐபிசி பிரிவு 108A – இந்தியாவிற்கு வெளியேயான குற்றங்களில் இந்தியாவின் தூண்டுதல்
  • ஐபிசி பிரிவு 109 – தூண்டிவிடப்பட்ட செயல் அதன் விளைவால் புரியப்பட்டால், மற்றும் அதனினின் தண்டனைக்கான வெளிப்படையான ஷரத்து செய்யப்படாமல் இருக்கும்போது, தூண்டுதலுக்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 110 – தூண்டிய நபரின் உள்நோக்கமின்றி, வேறுபட்ட உள்நோக்கத்துடன் தூண்டப்பட்ட நபர் செயலைச் செய்தால், தூண்டுதலுக்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 111 – ஒரு செயல் தூண்டிவிடப்பட்டு மற்றும் வேறொரு செயல் செய்யப்பட்டபோது, தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளதால்
  • ஐபிசி பிரிவு 112 – தூண்டிவிடப்பட்ட செயலுக்காக மற்றும் செய்யப்பட்ட செயலுக்காக, தூண்டிவிட்டவர் எப்போது ஒட்டுமொத்த தண்டனைக்குள்ளாக வேண்டும்
  • ஐபிசி பிரிவு 113 – தூண்டிவிட்டவரால் எண்ணப்பட்ட விளைவிலிருந்து, தூண்டப்பட்ட செயலால் ஏற்படுத்தப்பட்ட வேறுபட்ட ஒரு விளைவிற்காக, தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளதால்
  • ஐபிசி பிரிவு 114 – குற்றம் புரியப்படும்போது தூண்டியவர் உடனிருத்தல்
  • ஐபிசி பிரிவு 115 – மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்திற்குக் தூண்டுதல்
  • ஐபிசி பிரிவு 116 – சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தின் தூண்டுதல்
  • ஐபிசி பிரிவு 117 – பொதுமக்களால் அல்லது பத்திற்கும் மேற்பட்ட நபர்களால் குற்றம் புரியத் தூண்டுதல்
  • ஐபிசி பிரிவு 118 – மரணதண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தைப் புரிவதற்கான திட்டத்தை மறைத்தல்
  • ஐபிசி பிரிவு 119 – எந்தஒரு குற்றம் புரியப்படுவதைத் தடுப்பது பொதுப்பணியாளரின் கடமையோ, அக்குற்றம் புரியப்படுவதற்கான திட்டத்தை அவர் மறைத்தல்
  • ஐபிசி பிரிவு 120 – சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தைப் புரிவதற்கான திட்டத்தை மறைத்தல்
  • ஐபிசி பிரிவு 120A – குற்றச் சதியின் பொருள் விளக்கம்:
  • ஐபிசி பிரிவு 120B – குற்றச் சதிக்கு தண்டனை
  • ஐபிசி பிரிவு 121 – இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல் அல்லது போர் தொடுப்பதற்கு முயற்சித்தல் அல்லது போர் தொடுக்கத் தூண்டுதல்
  • ஐபிசி பிரிவு 121A – சட்டப்பிரிவு 121 ஆல் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களைப் புரிவதற்குச் சதி
  • ஐபிசி பிரிவு 122 – இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் உள்நோக்கத்துடன் ஆயுதங்கள், முதலானவற்றைச் சேகரித்தல்
  • ஐபிசி பிரிவு 123 – போர் தொடுப்பதற்கான திட்டத்திற்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன் மறைத்தல்
  • ஐபிசி பிரிவு 124 – ஏதாவதொரு சட்டபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டாயப்படுத்தும் அல்லது தடுக்கும் உள்நோக்கத்துடன் குடியரசுத்தலைவர், ஆளுநர் முதலானவர்களைத் தாக்குதல்
  • ஐபிசி பிரிவு 124A – ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி
  • ஐபிசி பிரிவு 125 – இந்திய அரசாங்கத்துடன் கூட்டாக எந்த ஆசிய சக்திக்கும் எதிரான போரை நடத்துதல்.
  • ஐபிசி பிரிவு 126 – இந்திய அரசாங்கத்துடன் அமைதி உறவில் உள்ள நாட்டின் எல்லை பகுதிகளின்மீது கொள்ளை புரிதல்
  • ஐபிசி பிரிவு 127 – சட்டப் பிரிவுகள் 125 மற்றும் 126 களில் குறிப்பிடப்பட்டுள்ள போர் அல்லது கொள்ளையடித்தலில் எடுக்கப்பட்ட சொத்தைப் பெறுதல்
  • ஐபிசி பிரிவு 128 – நாட்டின் அல்லது போரின் கைதி தப்பிப்பதற்கு, பொதுப் பணியாளர் தன்னிச்சையாக அனுமதித்தல்
  • ஐபிசி பிரிவு 129 – அத்தகைய கைதி தப்பிப்பதற்கு பொதுப் பணியாளர் கவனக்குறைவாக அனுமதித்தல்
  • ஐபிசி பிரிவு 130 – அத்தகைய கைதியின் தப்பித்தல், மீட்டல் அல்லது புகலிடத்திற்கு உதவுதல்
  • ஐபிசி பிரிவு 131 – கலகம் செய்யத் தூண்டுதல் அல்லது ஒரு தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரை அவரது அலுவலிலிருந்து கீழ்ப்படியாமைக்கு இசையைச் செய்ய முயற்சித்தல்
  • ஐபிசி பிரிவு 132 – கலகத்தைத் தூண்டி, அதன் விளைவில் கலகம் புரியப்படுதல்
  • ஐபிசி பிரிவு 133 – தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரால், அவரது மேனிலை அலுவலர் அவரின் அலுவலகப் பணியாற்றும் போது, தாக்கப்பட தூண்டுதல்
  • ஐபிசி பிரிவு 134 – அத்தகைய தாக்குதலைத் தாண்டி, தாக்குதல் புரியப்பட்டால்
  • ஐபிசி பிரிவு 135 – தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரர் பணியை விட்டோடுவதற்குத் தூண்டுதல்
  • ஐபிசி பிரிவு 136 – பணியை விட்டோடியவர்க்குப் புகலிடமளித்தல்
  • ஐபிசி பிரிவு 137 – பணியை விட்டோடியவர், தலைவரின் கவனக்குறைவால் வணிகக் கப்பலில் மறைத்து வைக்கப்படல்
  • ஐபிசி பிரிவு 138 – தரைப் படை, கடற்படை அல்லது விமானப் படை வீரரால் கீழ்ப்படியாமை செயலுக்குத் தூண்டுதல்
  • ஐபிசி பிரிவு 138A – இந்திய கடல்சார் பணிக்குப் பொருந்தக் கூடிய பின்வருகின்ற சட்டப்பிரிவுகள்
  • ஐபிசி பிரிவு 139 – குறிப்பிட்ட சட்டங்களுக்கு உட்படும் நபர்கள்
  • ஐபிசி பிரிவு 140 – தரைப் படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப் படை வீரரால்பயன்படுத்தப்படும் சீருடையை அணிதல் அல்லது அடையாள சின்னத்தைக் கொண்டு செல்லல்
  • ஐபிசி பிரிவு 141 – சட்ட விரோதமான கூட்டம்
  • ஐபிசி பிரிவு 142 – சட்ட விரோதமான கூட்டத்தில் உறுப்பினராதல்
  • ஐபிசி பிரிவு 143 – சட்ட விரோதமான கூட்டத்தில் சேர்ந்திருப்பதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 144 – சட்ட விரோதமான கூட்டத்தில் பயங்கரமான ஆயுதங்களுடன் இருப்பதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 145 – களைந்து செல்லும்படி உத்தரவிட்டும் சட்ட விரோதமான கூட்டத்தில் இருப்பதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 146 – கலகம்
  • ஐபிசி பிரிவு 147 – கலகம் செய்வதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 148 – பயங்கர ஆயுதங்களுடன் கலகம் செய்வதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 149 – சட்ட விரோதமான கும்பலில் உள்ள ஒவ்வொருவருக்கும் தண்டனை
  • ஐபிசி பிரிவு 150 – சட்டவிரோதமான கூட்டத்தில் சேர நபர்களை பணியமர்த்தல் அல்லது சேர்த்தல்.
  • ஐபிசி பிரிவு 151 – ஐந்து அல்லது அதற்கு மேலான நபர்கள் அதை கலைக்கக் கட்டளையிடப்பட்ட பின்னர் கூடுவது அல்லது தொடர்வது.
  • ஐபிசி பிரிவு 152 – கழக கூட்டத்தை அடக்க முற்படும்போது போது ஊழியரை தாக்குவது அல்லது தடுப்பதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 153 – கலகம் செய்வதற்கு தூண்டிவிடுவதற்கான தண்டனை, கலகம் நடந்தாலும், நடக்காவிட்டாலும்
  • ஐபிசி பிரிவு 153A – சாதி, மத, இன மொழி, சமயம் சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டிவிடுதல்
  • ஐபிசி பிரிவு 153AA – எந்தவொரு ஊர்வலத்திலும் ஆயுதங்களைக் கையாளுதல் அல்லது ஆயுதங்களைக் கொண்டு எவ்வித வெகுஜன பயிற்சி அல்லது வெகுஜன பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுவதையோ அல்லது எடுத்துக்கொள்வதையோ தண்டிப்பதற்கான தண்டனையாகும்.
  • ஐபிசி பிரிவு 153B – பேச்சு, எழுத்து அல்லது சைகையால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவித்தல்
  • ஐபிசி பிரிவு 154 – கலகம் நடந்த இடத்தில் சொந்தக்காரர் அல்லது குடியிருப்பவருக்கு தண்டனை
  • ஐபிசி பிரிவு 155 – ஒரு இடத்தின் சொந்தக்காரருக்கு ஆதரவாக கலகம் நடத்துவதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 156 – கலகம் நடந்த இடத்தின் சொந்தக்காரருக்கு ஆதரவாக இருந்த அகேன் அல்லது அந்த இடத்தின் வசிப்பவருக்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 157 – சட்டவிரோதமான கூட்டத்திற்கு என்று அமர்த்தப்பட்டு புகலிடம் கொடுப்பதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 158 – சட்ட விரோதமான அல்லது கலகக் கூட்டத்திற்கு என்று அமர்த்தப் பட்டவருக்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 159 – அமைதிக்கு பங்கம் விளைவித்தல்
  • ஐபிசி பிரிவு 160 – பங்கம் விளைவித்ததற்காக தண்டனை
  • ஐபிசி பிரிவு 161 – பொது ஊழியர்கள் ஒரு கடமையை நிறைவேற்ற ஊதியத்தைத் தவிர கையூட்டு பெறுதல்
  • ஐபிசி பிரிவு 162 – ஊழல் அல்லது சட்டவிரோதமான வழிகளால், பொதுப் பணியாளரை செய்ய வைக்கும் பொருட்டு கையூட்டைப் பெறுதல்
  • ஐபிசி பிரிவு 163 – பொதுப் பணியாளரிடம், தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்துவதற்காக கையூட்டு பெறுதல்
  • ஐபிசி பிரிவு 164 – சட்டப்பிரிவு 162 அல்லது 163 இல் பொருள் விளக்கப்பட்டுள்ள குற்றங்கள், பொதுப் பணியாளரால் தூண்டப்பட்டதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 165 – விலை உயர்ந்த பொருட்களை பொதுஊழியர்கள் ஒரு கடமையை நிறைவேற்றியதற்காக கையூட்டாகப் பெறுதல்
  • ஐபிசி பிரிவு 165A – கையூட்டு பெறுவதற்கு குற்ற உடந்தையாக இருப்பதற்கான தண்டனை
    ஐபிசி பிரிவு 166 – யாரேனும் ஒரு நபருக்குத் தீங்கு விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பொதுப் பணியாளர் சட்டத்திற்குக் கீழ்ப்படியாதிருத்தல்
  • ஐபிசி பிரிவு 167 – பொது ஊழியர் காயப்படுத்தும் நோக்கத்துடன் தவறான ஆவணத்தை வடிவமைத்தல்.
  • ஐபிசி பிரிவு 168 – பொது ஊழியர் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடுதல்.
  • ஐபிசி பிரிவு 169 – பொதுப் பணியாளர் சட்டத்திற்கு முரணான சொத்தை வாங்குதல் அல்லது ஏலத்தில் எடுத்தல்
  • ஐபிசி பிரிவு 170 – பொது ஊழியராக நடித்தல்
  • ஐபிசி பிரிவு 171 – பொது ஊழியருடைய சீருடை அல்லது அடையாள அட்டை ஆகியவற்றை பொது ஊழியர் அல்லாதவர் ஏமாற்றும் எண்ணத்தில் அணிதல்.
  • ஐபிசி பிரிவு 171A – “வேட்பாளர் “, “தேர்தல் உரிமை” இவற்றின் பொருள் வரையறை
  • ஐபிசி பிரிவு 171B – லஞ்சம்.
  • ஐபிசி பிரிவு 171C – தேர்தலில் தகாத செல்வாக்கை உபயோகித்தல்
  • ஐபிசி பிரிவு 171D – தேர்தலில் ஆள்மாறாட்டம்
  • ஐபிசி பிரிவு 171E – லஞ்சம் தொடர்பான தண்டனைகள்
  • ஐபிசி பிரிவு 171F – தேர்தலில் தவறான செல்வாக்கு அல்லது ஆள்மாறாட்டத்திற்கு தண்டனை.
  • ஐபிசி பிரிவு 171G – தேர்தல் தொடர்பாக தவறான அறிக்கை.
  • ஐபிசி பிரிவு 171H – தேர்தலில் சட்டவிரோத பணம் செலுத்துதல்
  • ஐபிசி பிரிவு 171I – தேர்தல் கணக்குகளை வைத்திருக்கத் தவறியது.
    ஐபிசி பிரிவு 172 – நீதிமன்ற அழைப்பாணைக்கு கட்டுப்படாமல் தலைமறைவாதல்
  • ஐபிசி பிரிவு 173 – அழைப்பாணையை தவிர்த்தல்
  • ஐபிசி பிரிவு 174 – பொது ஊழியர்களிடமிருந்து உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் வருகையை தவிர்த்தல்.
  • ஐபிசி பிரிவு 174A – 1974 ஆம் ஆண்டின் 2 ஆம் பிரிவின் 82 வது பிரிவின் கீழ் அதிகாரப்பூர்வ உத்தரவுக்கு இணங்காமல் வராதிருத்தல்.
  • ஐபிசி பிரிவு 175 – ஆவணங்களை வழங்குவதற்கு சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தப்படுபவர் சமர்பிக்காமல் தவிர்த்தல்
  • ஐபிசி பிரிவு 176 – பொது ஊழியருக்கு அறிவிப்பு அல்லது தகவலை வழங்குவதற்கு சட்டபூர்வமாக கட்டாயப்படுத்திய நபரால் வழங்கப்படாமல் இருத்தல்.
  • ஐபிசி பிரிவு 177 – பொய்யான தகவலை நிறுவுதல்.
  • ஐபிசி பிரிவு 178 – பொது ஊழியரால் உத்தேசிக்கப்படும் போது அது உறுதிமொழி செய்ய மறுத்தல்.
  • ஐபிசி பிரிவு 179 – பொது ஊழியருக்கு விடையளிக்க மறுத்தல்
  • ஐபிசி பிரிவு 180 – அறிக்கை கையொப்பமிட மறுத்தல்
  • ஐபிசி பிரிவு 181 – சட்டப்பூர்வமான பொது ஊழியருக்கு தவறான அறிக்கை மூலம் உறுதி அளித்தல்.
  • ஐபிசி பிரிவு 182 – ஒருவரை துன்பப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பொது ஊழியரிடம் பொய்யான தகவலை கொடுத்து செயல்பட செய்தல்
  • ஐபிசி பிரிவு 183 – ஒரு பொது ஊழியரின் சட்டபூர்வமான அதிகாரம் மூலம் சொத்துக்களை எடுத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு.
  • ஐபிசி பிரிவு 184 – பொதுப் பணியாளரின் அதிகாரத்தினால் விற்பனைக்குரிய சொத்தின் விற்பனையைத் தடுத்தல்
  • ஐபிசி பிரிவு 185 – பொதுப் பணியாளரின் அதிகாரத்தினால் விற்பனைக்குரிய சொத்தை சட்டவிரோதமாக வாங்குதல் அல்லது ஏலத்தில் எடுத்தல்
  • ஐபிசி பிரிவு 186 – பொது ஊழியரை தம்முடைய செயலைச் செய்யவிடாமல் தடுத்தல்
  • ஐபிசி பிரிவு 187 – பொதுப்பணியாளருக்கு, உதவி செய்ய சட்டத்தினால் கடமைப்பட்டிருக்கும் போது உதவி செய்யாமலிருத்தல்
  • ஐபிசி பிரிவு 188 – பொதுப் பணியாளரால், முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்ப்படியாமை
  • ஐபிசி பிரிவு 189 – பொதுப் பணியாளருக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்தல்
  • ஐபிசி பிரிவு 190 – பொதுப் பணியாளரிடம் இருந்து பாதுகாப்பு கோரமலிருப்பதைத் தூண்டுவதற்க்காக, நபருக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்தல்
  • ஐபிசி பிரிவு 191 – பொய் சாட்சியம் அளித்தல்
  • ஐபிசி பிரிவு 192 – பொய் சாட்சியம் புனைதல்
  • ஐபிசி பிரிவு 193 – பொய் சாட்சியத்திற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 194 – மரண தண்டனை தண்டிப்பைப்பெறும் உள்நோக்கத்துடன், பொய்யான சாட்சியத்தை அளித்தல் அல்லது புனைதல்
  • ஐபிசி பிரிவு 195 – ஆயுள் சிறைத்தண்டனை அல்லது சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்திற்கான தண்டிப்பைப்பெரும் உள்நோக்கத்துடன், பொய்யான சாட்சியத்தை அளித்தல் அல்லது புனைதல்
  • ஐபிசி பிரிவு 195A – பொய்யான சாட்சியம் அளிக்க யாரேனும் ஒரு நபரை அச்சுறுத்தல்
  • ஐபிசி பிரிவு 196 – பொய் சாட்சியம் எனதெரிந்தே அதைப் பயன்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 197 – பொய்யான சான்றிதழை அளித்தல் அல்லது அதில் கையொப்பமிடல்
  • ஐபிசி பிரிவு 198 – பொய்யானதெனத் தெரிந்தே ஒரு சான்றிதழை உண்மையானது போன்று பயன்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 199 – சட்டப்படி சாட்சியமாக பெறத்தக்க சாற்றுரையில் பொய்யான வாக்குமூலம் கொடுத்தல்
  • ஐபிசி பிரிவு 200 – அது பொய்யானதென தெரிந்த அத்தகைய சாற்றுரையை உண்மையானது போன்று பயன்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 201 – குற்றவாளியை மறைக்க சாட்சியத்தை மறைத்தல் அல்லது பொய் தகவல் கொடுத்தல்.
  • ஐபிசி பிரிவு 202 – குற்றம் பற்றிய தகவலைத் தர கடமைப்பட்டுள்ள நபர், உள்நோக்கத்துடன் தராதிருத்தல்
  • ஐபிசி பிரிவு 203 – புரியப்பட்ட ஒரு குற்றத்தின் பொருட்டு பொய்யான தகவலை அளித்தல்
  • ஐபிசி பிரிவு 204 – சாட்சியமாகத் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்க (ஆவணம் அல்லது மின்னணுப் பதிவை) அழித்தல்
  • ஐபிசி பிரிவு 205 – உரிமையியல் அல்லது குற்ற வழக்குத் தொடர்வில், செயல் அல்லது செயல் நடவடிக்கைக்காக பொய்யாக ஆள்மாறட்டம் செய்தல்
  • ஐபிசி பிரிவு 206 – பறிமுதல் செய்தல் அல்லது நிறைவேற்றுதலின் பொருட்டு, சொத்து கைப்பற்றப்படுவதைத் தடுப்பதற்கு, அதை மோசடியாக அகற்றுதல் அல்லது மறைத்தல்
  • ஐபிசி பிரிவு 207 – பறிமுதல் செய்தல் அல்லது நிறைவேற்றுதல் வாயிலாக சொத்து கைப்பற்றப்படுதலைத் தடுக்க மோசடியாக உரிமை கோரல்
  • ஐபிசி பிரிவு 208 – தர வேண்டியதில்லாத தொகைக்கு தீர்ப்பாணையை மோசடியாகப் பெறுதல்
  • ஐபிசி பிரிவு 209 – நேர்மையற்ற முறையில் நீதிமன்றத்தில் பொய்யான உரிமையைக் கோருதல்
  • ஐபிசி பிரிவு 210 – தர வேண்டியதில்லாத தொகைக்கு மோசடியாக தீர்ப்பாணையைப் பெறுதல்
  • ஐபிசி பிரிவு 211 – துன்பம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பொய்யான குற்றச்சாட்டை கொடுத்தல்
  • ஐபிசி பிரிவு 212 – குற்றம் புரிந்தவருக்கு புகலிடம் அளித்தல்
  • ஐபிசி பிரிவு 213 – ஒரு குற்றம் புரிந்தவரை தண்டனையிலிருந்து தப்பிக்க வைப்பதற்காக வெகுமதி முதலியவற்றைப் பெறுதல்
    ஐபிசி பிரிவு 214 – குற்றம் புரிந்தவரைத் தப்பிக்க வைப்பதற்குப் பலனாக வெகுமதியை அளித்தல்அல்லது சொத்தை திரும்ப ஒப்படைத்தல்
  • ஐபிசி பிரிவு 215 – திருடப்பட்ட சொத்து முதலியனவற்றை மீட்க உதவுவதற்கு வெகுமதியைப் பெறுதல்
  • ஐபிசி பிரிவு 216 – பாதுகாவலிலிருந்து தப்பிவிட்ட அல்லது கைது செய்யப்பட்ட உத்தரவிட்டிருக்கும் குற்றம் புரிந்தவருக்கு புகலிடம் அளித்தல்
  • ஐபிசி பிரிவு 216A – கொள்ளைக்காரர்கள் அல்லது கூட்டுக் கொள்ளைக்காரர்களுக்கு புகலிடம் அளிப்பதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 216B – பிரிவுகள் 212, 216 மற்றும் 216-A களில் “புகலிடம் கொடுத்தல்”என்பதன் பொருள் விளக்கம்
  • ஐபிசி பிரிவு 217 – பொதுப் பணியாளர் சட்டத்தின் கட்டளைக்குக் கீழ்படியாமல், நபரைத் தண்டனையிலிருந்து அல்லது சொத்தைப் பறிமுதலிலிருந்து உள்நோக்கத்துடன் காப்பாற்றுதல்
  • ஐபிசி பிரிவு 218 – நபரைத் தண்டனையிலிருந்து அல்லது சொத்தைப் பறிமுதலிலிருந்து காப்பாற்றும் உள்நோக்கத்துடன், தவறான பதிவேட்டை அல்லது எழுத்துருவை பொதுப்பணியாளர் ஏற்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 219 – நீதிமன்ற செயல் நடவடிக்கையில் சட்டத்திற்குப் புறம்பாக அறிக்கை முதலியவற்றை, பொதுப் பணியாளர் நேர்மையற்ற முறையில் தாக்கல் செய்தல்
  • ஐபிசி பிரிவு 220 – அதிகாரம் படைத்த நபரால், தான் சட்டத்திற்கு புறம்பாக செய்கிறோம் என தெரிந்தே விசாரணைக்கு மேல் அனுப்பப்படுத்தல் அல்லது சிறை வைக்கப்படுதல்
  • ஐபிசி பிரிவு 221 – பொதுஊழியர் வேண்டுமென்றே கைதுசெய்ய வேண்டியவரை கைது செய்யாமல் விடுதல்
  • ஐபிசி பிரிவு 222 – பொதுஊழியர் வேண்டுமென்றே தண்டனை விதிக்கப்பட்டவரை கைது செய்யாது விடுதல்
  • ஐபிசி பிரிவு 223 – கவனக்குறைவின் காரணமாக பொது ஊழியர் குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது தண்டனை பெற்றவரை காவலில் இருந்து தப்பி ஓடச் செய்தல்
  • ஐபிசி பிரிவு 224 – ஒரு நபர் சட்டபூர்வமாகக் கைது செய்யப்படுவது அவரால் எதிர்க்கப்படுதல் அல்லது தடுக்கப்படுதல்
  • ஐபிசி பிரிவு 225 – மற்றொரு நபர் சட்டபூர்வமாகக் கைது செய்யப்படுவதை எதிர்த்தல் அல்லது தடுத்தல்
  • ஐபிசி பிரிவு 225A – மற்றபடி குறிப்பிட்டுக் கூறப்படாத வழக்குகளில், பொதுப் பணியாளர் கைது செய்யத் தவறுதல் அல்லது தப்பிக்க எதிர்பின்மையாக இருத்தல்
  • ஐபிசி பிரிவு 225B – மற்றபடி வகை செய்யப்படாத வழக்குகளில் சட்டபூர்வமான கைது, அல்லது தப்பித்தல் அல்லது மீட்டலை, எதிர்த்தல் அல்லது தடுத்தல்
  • ஐபிசி பிரிவு 226 – நாடு கடத்துதலிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக திரும்பி வரல்
  • ஐபிசி பிரிவு 227 – தண்டனைக் கழிப்பின்மீதான நிபந்தனையை மீறுதல்
  • ஐபிசி பிரிவு 228 – நீதிமன்றச் செயல் நடவடிக்கையின்போது பொதுப் பணியாளரை உள்நோக்கத்துடன் அவமதித்தல் அல்லது குறுக்கிடுதல்
  • ஐபிசி பிரிவு 228A – குறிப்பிட்ட குற்றங்கள் முதலியனவற்றில், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 229 – ஒரு நீதிச்சான்றாளர் அல்லது மதிப்பீட்டாளராக ஆள்மாறாட்டம் செய்தல்
  • ஐபிசி பிரிவு 229A – பிணை அல்லது பத்திரத்தின் பேரில் விடுவிக்கப்பட்ட நபர், நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறுதல்
  • ஐபிசி பிரிவு 230 – நாணயம் வரையரை
  • ஐபிசி பிரிவு 231 – போலி நாணயத்தை உண்டாகுதல்
  • ஐபிசி பிரிவு 232 – இந்திய நாணயங்களை போலியாக செய்தல்
  • ஐபிசி பிரிவு 233 – போலி நாணயம் செய்வதற்கான கருவிகளை செய்தல் அல்லது விற்பனை செய்தல்
  • ஐபிசி பிரிவு 234 – போலி இந்திய நாணயங்களைச் செய்வதற்கான கருவிகளைச் செய்தல் அல்லது விற்பனை செய்தல்
  • ஐபிசி பிரிவு 235 – போலியாக நாணயங்கள் அல்லது இந்திய நாணயங்கள் தயாரிப்பதற்கான கருவிகள் அல்லது பொருட்கள் வைத்திருத்தல்
  • ஐபிசி பிரிவு 236 – இந்தியாவிற்கு வெளியே நாணயத்தை போலியாகத் தயாரிக்க இந்தியாவில் தூண்டுதல்
  • ஐபிசி பிரிவு 237 – கள்ள நாணயத்தின் இறக்குமதி அல்லது ஏற்றுமதி.
  • ஐபிசி பிரிவு 238 – இந்திய நாணயத்தின் போலிகளை, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்தல்
  • ஐபிசி பிரிவு 239 – போலியான நாணயம் என தெரிந்தே உடைமையில் வைத்திருந்து அதைக்கொடுத்தல்
  • ஐபிசி பிரிவு 240 – போலியான இந்திய நாணயம் என தெரிந்தே உடைமையில் வைத்திருந்து, அதைக் கொடுத்தல்
  • ஐபிசி பிரிவு 241 – கொடுப்பவர் உடைமையில் முதன் முதலில் பெற்றபோது, அது போலியான நாணயம் என தெரியாதிருந்து, அதை உண்மையான நாணயம் என கொடுத்தால்
  • ஐபிசி பிரிவு 242 – நபரின் உடைமையில் வந்தபோதே அது போலியானது என தெரிந்தும், போலியான நாணயத்தை அவர் உடைமையில் வைத்திருத்தல்
  • ஐபிசி பிரிவு 243 – நபரின் உடைமையில் வந்தபோதே அது போலியானது என தெரிந்தும், போலியான இந்திய நாணயத்தை அவர் உடைமையில் வைத்திருத்தல்
  • ஐபிசி பிரிவு 244 – நாணய தொழிற்சாலையில் பணிக்கமர்த்தப்பட்ட நபர், சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து வேறுபட்ட எடை அல்லது அமைப்பு முறை கொண்ட நாணயத்தை செய்யப்பட செய்தல்
  • ஐபிசி பிரிவு 245 – நாணய தொழிற்சாலையிலிருந்து நாணயம் தயாரிக்கும் கருவியை சட்டவிரோரோதமாக எடுத்துச் செல்லல்
  • ஐபிசி பிரிவு 246 – மோசடியாக அல்லது நேர்மையின்றி, நாணயத்தின் எடையை குறைத்தல் அல்லது அமைப்பு முறையை மாற்றுதல்
  • ஐபிசி பிரிவு 247 – மோசடியாக அல்லது நேர்மையின்றி இந்திய நாணயத்தின் எடையைக் குறைத்தல் அல்லது அமைப்பு முறையை மாற்றுதல்
  • ஐபிசி பிரிவு 248 – நாணயத்தின் தோற்றத்தை, அது வேறு விவரிப்பிலான நாணயம் போல் அனுமதிக்கப்பட்ட உள்நோக்கத்துடன் மாற்றியமைத்தல்
  • ஐபிசி பிரிவு 249 – இந்திய நாணயத்தின் தோற்றத்தை, அது வேறு விவரிப்பிலான நாணயம் போல் அனுமதிக்கப்பட்ட, உள்நோக்கத்துடன் மாற்றியமைத்தல்
  • ஐபிசி பிரிவு 250 – நாணயம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெரிந்தே உடமையில் வைக்கப்பட்டிருந்த அதை விநியோகித்தல்
  • ஐபிசி பிரிவு 251 – இந்திய நாணயம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெரிந்தே உடமையில் வைக்கப்பட்டிருந்த அதை விநியோகித்தல்
  • ஐபிசி பிரிவு 252 – நபரின் உடமைக்கு வந்தபோதே, அது மாற்றியமைக்கப்பட்டுள்ள நாணயம் என தெரிந்தும், அதை அவரின் உடமையில் வைத்திருத்தல்
  • ஐபிசி பிரிவு 253 – நபரின் உடமைக்கு வந்தபோதே, அது மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்திய நாணயம் என தெரிந்தும், அதை அவரின் உடமையில் வைத்திருத்தல்
  • ஐபிசி பிரிவு 254 – கொடுப்பவர் உடமையில் முதன் முதலில் பெற்ற போது மாற்றியமைக்கப்பட்டுள்ள நாணயம் என தெரியாதிருந்து, அதை உண்மையானது என கொடுத்தல்
  • ஐபிசி பிரிவு 255 – அரசாங்க முத்திரையை போலியாகத் தயாரித்தல்
  • ஐபிசி பிரிவு 256 – அரசாங்க முத்திரையை போலியாகத் தயாரிப்பதற்காக, உபகரணம் அல்லது பொருளை உடமையில் வைத்திருத்தல்
  • ஐபிசி பிரிவு 257 – அரசாங்க முத்திரையை போலியாகத் தயாரிப்பதற்கு, உபகரணத்தைத் தயாரித்தல் அல்லது விற்றல்
  • ஐபிசி பிரிவு 258 – போலியான அரசாங்க முத்திரையை விற்றல்
  • ஐபிசி பிரிவு 259 – போலியான அரசாங்க முத்திரையை உடமையில் வைத்திருத்தல்
  • ஐபிசி பிரிவு 260 – போலியானது என தெரிந்த ஒரு அரசாங்க முத்திரையை உண்மையானதுபோல் பயன்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 261 – அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன், அரசு முத்திரையைக் கொண்டிருக்கிற பொருளிலிருந்து எழுதப்பட்டதை மறைத்தல், அல்லது பயன்படுத்தப்பட்ட ஒரு முத்திரையை ஆவணத்திலிருந்து அகற்றுதல்
  • ஐபிசி பிரிவு 262 – முன்னரே பயன்படுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிந்த அரசாங்க முத்திரையைப் பயன்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 263 – முத்திரை பயன்படுத்தப்பட்டுவிட்டது என்பதை உணர்த்தும் குறியை அழித்தல்
  • ஐபிசி பிரிவு 263A – பொய்யான முத்திரைகளுக்குத் தடை
  • ஐபிசி பிரிவு 264 – எடை தெரிவிப்பதற்கான பொய்யான உபகரணத்தை மோசடியாகப் பயன்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 265 – பொய்யான எடையை அல்லது அளவையை மோசடியாகப் பயன்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 266 – பொய்யான எடை அல்லது அளவையை, உடமையில் வைத்திருத்தல்
  • ஐபிசி பிரிவு 267 – பொய்யான எடை அல்லது அளவையைத் தயாரித்தல் அல்லது விற்றல்
  • ஐபிசி பிரிவு 268 – பொதுத் தொல்லை
  • ஐபிசி பிரிவு 269 – உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய கவனக்குறைவான செயல்
  • ஐபிசி பிரிவு 270 – உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய தீய எண்ணத்திலான செயல்
  • ஐபிசி பிரிவு 271 – தொற்றுத்தடை தனிமை விதிக்கு கீழ்ப்படியாமை
  • ஐபிசி பிரிவு 272 – விற்பனைக்காக எண்ணப்பட்ட உணவு அல்லது பானத்தில் கலப்படம்
  • ஐபிசி பிரிவு 273 – கேடு விளைவிக்கக்கூடிய உணவை அல்லது பானத்தை விற்றல்
  • ஐபிசி பிரிவு 274 – மருந்துப் பொருட்களில் கலப்படம்
  • ஐபிசி பிரிவு 275 – கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளை விற்றல்
  • ஐபிசி பிரிவு 276 – ஒரு வேறுபட்ட மருந்து அல்லது தயாரிப்பைப் போல் மருந்தை விற்றல்
  • ஐபிசி பிரிவு 277 – பொது நீரூற்று அல்லது நீர்தேக்கத்தின் தண்ணீரை மாசுபடுத்துதல்
  • ஐபிசி பிரிவு 278 – சுற்றுச்சூழலை ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்குமாறு செய்தல்
  • ஐபிசி பிரிவு 279 – பொதுஇடத்தில் அஜாக்கிரதையாக வண்டியோட்டுதல் அல்லது சவாரி செய்யுதல்
  • ஐபிசி பிரிவு 280 – நீர்வழிக் கலத்தை கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் செலுத்துதல்
  • ஐபிசி பிரிவு 281 – பொய்யான ஒளிப் பாய்ச்சல், அடையாளக்குறி அல்லது மிதவையை பார்வையில் படும்படி வைத்தல்
  • ஐபிசி பிரிவு 282 – தண்ணீரைக் கடக்க, பாதுகாப்பற்ற அல்லது அளவுக்கு மீறி சுமை கொண்ட நீர்க்கலத்தில், வாடகைக்காக நபரை ஏற்றிச் செல்லுதல்
  • ஐபிசி பிரிவு 283 – பொதுப் பாதையில் அல்லது நீர்வழிப் பாதையில் ஆபத்து அல்லது தடை
  • ஐபிசி பிரிவு 284 – நஞ்சுப் பொருளின் பொருட்டு கவனக்குறைவான நடத்தை
  • ஐபிசி பிரிவு 285 – தீ அல்லது தீப்பற்றக்கூடிய பொருளின் பொருட்டு கவனக்குறைவான செய்கை
  • ஐபிசி பிரிவு 286 – வெடிபொருளின் பொருட்டு கவனக்குறைவான செய்கை
  • ஐபிசி பிரிவு 287 – இயந்திரத்தின் பொருட்டு கவனக்குறைவான செய்கை
  • ஐபிசி பிரிவு 288 – கட்டிடங்களை இடித்தல் அல்லது பழுது பார்த்தலின் பொருட்டு கவனக்குறைவான செய்கை
  • ஐபிசி பிரிவு 289 – விலங்கின் பொருட்டு கவனக்குறைவான செய்கை
  • ஐபிசி பிரிவு 290 – குறிப்பிட்டு வகை செய்யப்படாத பிற வழக்குகளில் பொதுத் தொல்லைக்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 291 – தொடரக் கூடாது என்ற உறுத்துக் கட்டளைக்குப் பின்னரும் தொல்லையைத் தொடர்தல்
  • ஐபிசி பிரிவு 292 – ஆபாச நூல்கள் முதலானவற்றை, விற்பனை செய்தல்
  • ஐபிசி பிரிவு 293 – ஆபாசமான பொருட்களை இளைஞர்களுக்கு விற்றல்
  • ஐபிசி பிரிவு 294 – ஆபாசமான செயல் அல்லது பாடல்களை பாடுதல்
  • ஐபிசி பிரிவு 294A – குலுக்கு சீட்டு பரிசு முறை அலுவலகத்தை வைத்திருத்தல்
  • ஐபிசி பிரிவு 299 – மரணம் விளைவிக்கும் குற்றம்
  • ஐபிசி பிரிவு 300 – கொலைக் குற்றம்
  • ஐபிசி பிரிவு 301 – ஒருவரை கொலை செய்யாவேண்டிய நோக்கத்தோடு செய்த செயலால் வேறு ஒருவருக்கு மரணம் விளைவித்தல்
  • ஐபிசி பிரிவு 302 – கொலைக்குற்றத்திற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 303 – ஆயும்தண்டனை கைதி கொலைசெய்வதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 304 – கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவித்த குற்றத்திற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 304A – அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல்
  • ஐபிசி பிரிவு 304B – வரதட்சனைக் கொடுமை மரணம்
  • ஐபிசி பிரிவு 305 – குழந்தைகள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை தற்கொலை செய்ய தூண்டுதல்
  • ஐபிசி பிரிவு 306 – தற்கொலைக்கு தூண்டுதல்
  • ஐபிசி பிரிவு 307 – கொலை செய்ய முயற்சி செய்தல்
  • ஐபிசி பிரிவு 308 – கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தைச்செய்ய முயற்சித்தல்
  • ஐபிசி பிரிவு 309 – தற்கொலை செய்ய முயற்சித்தல்
  • ஐபிசி பிரிவு 317 – பன்னிரண்டு வயதிற்குட்பட்ட குழந்தையை அதன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் நிராதரவாக விட்டுவிடுதல்.
  • ஐபிசி பிரிவு 318 – இறந்த குழந்தையின் சடலத்தை இரகசியமாக மறைத்தல்
  • ஐபிசி பிரிவு 319 – காயப்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 320 – கொடுங்காயம்
  • ஐபிசி பிரிவு 321 – வேண்டுமென்றே காயப்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 322 – வேண்டுமென்றே கொடுங்காயப்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 323 – தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 324 – பயங்கரமான ஆயுதம் அல்லது வேறு வழிகளால் தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 325 – தன்னிச்சையாக கொடுங்காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 326 – தன்னிச்சையாக பயங்கரமான ஆயுதத்தால் அல்லது வேறு வழிகளினால் கொடுங்காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 332 – பொதுஊழியரை அவருடைய கடமையைச் செய்யாவிட்டால் தன்னிச்சையாக தடுத்தல் அல்லது காயப்படுத்துவதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 333 – போது ஊழியரை அவருடைய கடமையைச் செய்யவிடாமல் தடுப்பதற்கு தன்னிச்சையாக கொடுங்காயம் ஏற்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 337 – உயிருக்கு (அ) தனி நபருடைய பாதுகாப்பிற்கு ஒரு செயலால் காயம் ஏற்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 338 – உயிருக்கு அல்லது தனி நபருடைய பாதுகாப்பிற்கு ஒரு செயலால் கொடுங்காயம் ஏற்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 339 – முறையற்ற தடுப்பு
  • ஐபிசி பிரிவு 340 – முறையற்று சிறையிடுதல்
  • ஐபிசி பிரிவு 341 – முறையற்ற தடுப்புக்கு தண்டனை
  • ஐபிசி பிரிவு 342 – எந்த நபரையும் முறையற்று சிறை வைப்பது குற்றமாகும்
  • ஐபிசி பிரிவு 349 – தாக்குதல்
  • ஐபிசி பிரிவு 350 – வன்முறைத் தாக்குதல்
  • ஐபிசி பிரிவு 351 – வன்முறையில் தாக்க முனைதல்
  • ஐபிசி பிரிவு 353 – வன்முறை செயலால் ஒரு பொதுஊழியரை தன்னுடைய கடமையை செய்யவிடாமல் தடுத்தல்
  • ஐபிசி பிரிவு 354 – வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 359 – ஆளை கவர்தல்
  • ஐபிசி பிரிவு 360 – இந்தியாவிலிருந்து கவர்ந்து செல்லுதல்
  • ஐபிசி பிரிவு 361 – பெற்றோர் பாதுகாப்பாளரிடமிருந்து கடத்திச் செல்லுதல்
  • ஐபிசி பிரிவு 362 – கடத்திச் செல்லுதல்
  • ஐபிசி பிரிவு 363 – கவர்ந்து செயல்வதற்க்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 363A – பிச்சையெடுப்பதற்காக இளம் சிறுவர்களை கவர்தல் அல்லது முடம் ஆக்குவதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 366 – பலாத்காரமாக ஒரு பெண்ணைத் திருமணத்திற்காகக் கவர்தல், கடத்தி செல்லுதல், தூண்டுதல் போன்றவை
  • ஐபிசி பிரிவு 366A – இளம்பெண்ணை கட்டாயப் புணர்ச்சிக்கு ஆட்படுத்தல்
  • ஐபிசி பிரிவு 370 – ஆள் கடத்தல்
  • ஐபிசி பிரிவு 375 – வன்முறைப் புணர்ச்சி
  • ஐபிசி பிரிவு 376 – வன்முறைப் புணர்ச்சிக்குரிய தண்டனை
  • ஐபிசி பிரிவு 376B – கணவன் மனைவி தனித்து வாழும் பொது புணர்ச்சி செய்தல்
  • ஐபிசி பிரிவு 376C – தன் பொறுப்பில் இருக்கும் பெண்ணை பொதுஊழியர் புணர்ச்சி செய்தல்
  • ஐபிசி பிரிவு 377 – இயற்கைக்கு மாறான குற்றங்கள்
  • ஐபிசி பிரிவு 378 – திருட்டு
  • ஐபிசி பிரிவு 379 – திருட்டுக் குற்றத்திற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 380 – வசிப்பிடங்கள் போன்றவற்றில் திருட்டு
  • ஐபிசி பிரிவு 381 – உரிமையாளரிடம் எழுத்தர் அல்லது பணியாளர் செய்யும் திருட்டு
  • ஐபிசி பிரிவு 382 – திருடுவதற்கு முன்னர் அல்லது செய்ய முற்படும் பொது மரணம் – காயம் ஏற்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 383 – அச்சுறுத்திப் பொருள் பறித்தல்
  • ஐபிசி பிரிவு 390 – கொள்ளை
  • ஐபிசி பிரிவு 391 – கூட்டுக்கொள்ளை
  • ஐபிசி பிரிவு 392 – கொள்ளையடித்ததற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 393 – கொள்ளையடிக்க முயற்சி செய்தல்
  • ஐபிசி பிரிவு 394 – கொள்ளையடிக்கும்போது தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 395 – கூட்டுக் கொள்ளைக்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 396 – கூட்டுக் கொலையுடன் கொலை செய்தல்
  • ஐபிசி பிரிவு 399 – கூட்டுக் கொள்ளையிடுவதற்கு ஆயத்தம் செய்தல்
  • ஐபிசி பிரிவு 402 – கூட்டுக்கொள்ளையடிப்பதற்காகக் கூடுதல்
  • ஐபிசி பிரிவு 403 – சொத்துக்களை கையாடல்
  • ஐபிசி பிரிவு 406 – நம்பிக்கை மோசடி செய்ததற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 409 – பொதுஊழியர் வாங்கி, வியாபாரி அல்லது தரகர் ஏஜென்ட் நம்பிக்கை மோசடி செய்ததற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 410 – திருட்டு சொத்து
  • ஐபிசி பிரிவு 411 – கள்ளப்பொருளை கரவுடன் பெறுதல்
  • ஐபிசி பிரிவு 412 – கரவுடன் பெற்ற கூட்டுக் கொள்ளைப் பொருள்
  • ஐபிசி பிரிவு 415 – வஞ்சித்தல்
  • ஐபிசி பிரிவு 416 – ஆள் மாறாட்டம்
  • ஐபிசி பிரிவு 420 – ஏமாற்றி மற்றும் நேர்மையின்றித் தூண்டிப் பொருளை பெறுதல் அல்லது கொடுக்கும்படி செய்தல்
  • ஐபிசி பிரிவு 425 – சொத்து அழித்தல்
  • ஐபிசி பிரிவு 429 – மிருகங்களைக் கொல்லுதலும் அல்லது ஊமையாக்குதலும்
  • ஐபிசி பிரிவு 435 – தீயிட்டு அல்லது வெடிமருந்து பொருட்களால் 100 ரூபாய் மதிப்புள்ள சொத்தை சேதப்படுத்துதல்
  • ஐபிசி பிரிவு 441 – அத்துமீறல்
  • ஐபிசி பிரிவு 442 – அத்துமீறி வீடு புகுதல்
  • ஐபிசி பிரிவு 443 – ஒளிந்து வீடு புகுதல்
  • ஐபிசி பிரிவு 444 – இரவில் ஒளிந்து வீடு புகுதல்
  • ஐபிசி பிரிவு 445 – வலிந்து வீடு புகுதல்
  • ஐபிசி பிரிவு 446 – இரவில் வலிந்து வீடு புகுதல்
  • ஐபிசி பிரிவு 447 – குற்றமுறு அத்து மீறலுக்கு தண்டனை
  • ஐபிசி பிரிவு 454 – வலிந்து வீடு புகுந்ததற்கான குற்றத்திற்குத் தண்டனை
  • ஐபிசி பிரிவு 468 – ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணத்தைத் தயாரித்தல்
  • ஐபிசி பிரிவு 471 – பொய்யாகப் புனையப்பட்ட உண்மையானதாக உபயோகம் செய்தல்
  • ஐபிசி பிரிவு 489A – ரூபாய்நோட்டுகள், பாங்கு நோட்டுகள் பற்றிய குற்றங்கள்
  • ஐபிசி பிரிவு 489B – பொய்யாக புனையப்பட்ட அல்லது போலியான ரூபாய் நோட்டு அல்லது வாங்கி நோட்டு உண்மையானதாக உபயோகம் செய்தல்
  • ஐபிசி பிரிவு 497 – பிறர்மனை உறவு
  • ஐபிசி பிரிவு 498A – கணவரால் அல்லது கணவரின் உறவினரால் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகள்
  • ஐபிசி பிரிவு 503 – மிரட்டல், அவமதித்தல் ஆகிய குற்றங்கள்
  • ஐபிசி பிரிவு 506 – குற்றங்கருதி மிரட்டுவதற்கான தண்டனை
  • ஐபிசி பிரிவு 511 – குற்றம் செய்ய முயற்சித்தல்

Download the IPC Sections List Tamil PDF using the link given below.

IPC Section list also in Different Languages

2nd Page of IPC Sections List (கிரிமினல் சட்டம்) PDF
IPC Sections List (கிரிமினல் சட்டம்)

IPC Sections List (கிரிமினல் சட்டம்) PDF Free Download

REPORT THISIf the purchase / download link of IPC Sections List (கிரிமினல் சட்டம்) PDF is not working or you feel any other problem with it, please REPORT IT by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If this is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.

SIMILAR PDF FILES