தமிழ் கதைகள் சிறுகதைகள்

தமிழ் கதைகள் சிறுகதைகள் PDF Download

Download PDF of தமிழ் கதைகள் சிறுகதைகள் from the link available below in the article, தமிழ் கதைகள் சிறுகதைகள் PDF free or read online using the direct link given at the bottom of content.

9 Like this PDF
❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp
REPORT THIS PDF ⚐

தமிழ் கதைகள் சிறுகதைகள்

தமிழ் கதைகள் சிறுகதைகள் PDF read online or download for free from the official website link given at the bottom of this article.

A moral story is one that helps you learn an important life lesson. Children enjoy stories with morals and learn important life lessons from them such as how to handle rejection, how to deal with fear, and much more.

Moral stories help in building the ethics and value that aid in developing the spirit of righteousness among children. Moral stories teach children the importance of remaining grounded and not straying from the right path due to the lures of greed, envy, or pride.

தமிழ் கதைகள் சிறுகதைகள் PDF | Baby Stories in Tamil PDF (Moral Stories for Kids)

ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு திடீர்னு பணக்கஷ்டம் வந்துச்சு ,உடனே தன்னோட கழுதையை வித்து அந்த பணத்தை வச்சு பிரச்னையை சமாளிக்கலாம்னு முடிவு பண்ணுனாரு.

தன்னோட மகன கூட்டிகிட்டு பக்கத்துக்கு சந்தைக்கு நடந்து போனாரு அந்த விவசாயி ,அப்படி போகும்போது ஒருத்தர் அவுங்கல பாத்து சொன்னாரு ,கழுதை சும்மாதான நடத்துவது ,உங்க ரெண்டு பேருல யாராவது அதுமேல உக்காந்துட்டு போகலாம்லனு சொன்னாரு

உடனே தன்னோட மகன அந்த கழுத மேல ஏத்தி விட்டுட்டு கூட சேர்ந்து நடந்தார் விவசாயி

கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அங்க வந்த இன்னொருத்தரு ,அட பாவி சின்ன பயலே வயசான உங்க அப்பாவ நடக்க விட்டுட்டு நீ உக்காந்துகிட்டு வரியேனு கேட்டாரு

உடனே விவசாயி சரினு தான் உக்காந்துக்கிட்டு அவரோட மகன கூட நடக்க சொன்னாரு ,

கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் ,ஒரு பாட்டி வந்து நீ எல்லாம் பெரிய மனுசனா,சின்ன பையன நடக்க விட்டு நீ உக்காந்துட்டு வரியேனு சொன்னாங்க .

உடனே தன்னோட மகனையும் கூட ஏத்திக்கிட்டு ஒண்ணா பயணம் செஞ்சாரு அவரு ,

அப்ப அந்த வந்த முதியவர் ஒருவர் அட கொடுமைக்காரர்களா இப்படி ரெண்டு பேரு அந்த குதிரைமேல உக்காந்து இருக்கீங்களே உங்களுக்கு இரக்கம் இல்லையானு கேட்டாரு

உடனே ரெண்டு பேரும் கீழ இறங்கிக்கிட்டு ,இனி என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க ,இனி இந்த கழுதைய நாம தூக்கிட்டு நடப்போம்னு ,ஒரு குச்சியை கழுதையோட கால்களுக்கு நடுவுல கட்டி தலைகீழா தூக்கிட்டு நடந்தாங்க ,

அப்ப அங்க ஒரு ஆறு குறிக்கிட்டுச்சு ,ஆத்த கடக்கறப்ப கழுத்த பயத்துல துள்ளி குதிச்சது ,உடனே பிடிய விட்டான் அந்த பையன் ,அப்ப அந்த கழுத்த ஆத்தோட போயிருச்சு

அடுத்தவங்க சொல்றத எல்லாத்தையும் கேட்ட அவங்களுக்கு ,கழுதையும் போயிருச்சு ,அத வித்து பணம் கிடைக்க வழியும் இல்லாம போயிருச்சு

நீதி :- சொல் புத்தியை விட சுய புத்தியே சிறந்தது

முட்டாள் கழுதையும் தந்திர நரியும் (Moral Sroties for Kids)

ஒரு காட்டுல ஒரு நரியும் கழுதையும் ரொம்ப நல்ல நண்பர்களா இருந்துச்சுங்க.ரெண்டு ஒண்ணா சேந்தே உணவு தேடி காட்டுக்குள்ள போகும்

ஏதாவது ஆபத்து வந்துச்சுன்னா ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் காப்பாத்தணும்னு அத்தூண்களுக்குள்ள ஒரு ஒப்பந்தம் இருந்துச்சு.

ஒருநாள் காட்டோட உள் பகுதிக்கு உணவு தேடி போச்சு நரி ,அப்ப அங்க திடீர்னு ஒரு சிங்கம் வந்துடுச்சு.சிங்கத்த பாத்து பயந்த நரி சுதாரிக்கிறதுக்கு முன்னாடி சிங்கம் அத பிடிச்சிடுச்சு

ரொம்ப பயந்துபோன நரி தன்னோட உயிர காப்பாத்திக்கிட நினைச்சது,உடனே அது சொல்லுச்சு சிங்க ராஜாவே சிங்க ராஜாவே எனக்கு ஒரு உதவி பண்ணுங்க.

என்ன நீங்க சாப்பிடாம விட்டுடீங்கன்னா உங்களுக்கு ஒரு கொழுத்த கழுதைய சாப்பிடுறதுக்கு கொண்டு வரேன்னு சொல்லுச்சு

நரிய சாப்பிட்டா இன்னைக்கு மட்டும் பசியாறலாம் ,அதே நேரத்துல கழுதைய சாப்பிட்டா ஒரு வாரம் சாப்பிடலாம்னு நினச்ச சிங்கம் அது எப்படி நீ சொன்னா கழுத இங்க வரும்னு கேட்டுச்சு

அதுக்கு நரி சொல்லுச்சு அந்த கொழுத்த கழுத என்னோட நண்பன்தான் ,நான் கூப்பிட்டா எங்க வேணும்னாலும் வரும்னு சொல்லுச்சு

இத கேட்ட சிங்கம் அந்த நரிய போக விட்டுச்சு.தன்னோட இருப்பிடத்துக்கு போன நரி தன்னோட நண்பனான கழுதைய கூட்டிகிட்டு திரும்ப அங்க வந்துச்சு

மறைஞ்சிருந்த சிங்கம் அந்த கழுதைய பிடிச்சி அடிச்சிடுச்சு,அதுக்கு அப்புறமா ஓரமா நின்னுகிட்டு இருந்த நரிய தாவி பிடிச்சது

அடடா சிங்க ராஜாவே நான் சொன்ன மாதிரியே கழுதைய கொண்டுவந்து விட்டுட்டனே என்ன எதுக்கு மறுபடியும் பிடிக்கிறீங்கன்னு கேட்டுச்சு

அதுக்கு சிங்க ராஜா சொல்லுச்சு உன்னோட உயிரை காப்பாத்துறதுக்கு ,உன் கூட இருக்குற நண்பனையே பலி கொடுக்க துணிஞ்சு உனக்கு இந்த தண்டன சரிதான்

உன்ன எல்லாம் நம்ப முடியாது ,மறுபடியும் உனக்கு ஆபத்து வந்துச்சுனா நீ என்னையும் காட்டி கொடுத்துடுவ ,அதனால இன்னைக்கே ஒண்ண கொள்ள முடிவு பண்ணிட்டேன்னு சொல்லி ஒரே அடி அடிச்சது சிங்கம்

நீதி :- கேட்ட நண்பர்கள் தீமையையே பரிசாக வழங்குவர்

காட்டு ராஜாவுக்கு போட்டி

அதனால தற்காலிகமா ஒரு சிங்கராஜாவ கண்டுபிடிக்க போட்டி ஒன்னு வச்சது

சிங்க ராஜாவுக்கு அவருக்கு பிடிச்ச குரங்கார் தான் இந்த போட்டியில ஜெயிக்கணும்னு ஆசை இருந்துச்சு

அதனால குரங்கருக்கு சுலபமான போட்டிய வைக்க நினைச்சது சிங்க ராஜா அதனால வாழைப்பழம் தின்கிற போட்டிய அறிவிச்சது சிங்கம் ,இதுல கண்டிப்பா குரங்கு ஜெயிச்சிடும்னு நெனச்சது சிங்கம்

ஆனா போட்டி அன்னைக்கு குரங்கார விட மாத்த மிருகங்கள் தான் வாழைப்பழத்தை அதிகமா தின்னுச்சுங்க

ஆச்சார்ய பட்டு போன சிங்கராஜா கேட்டாரு ,இது என்ன குரங்காரே எப்பவும் வாழைப்பழம் சாப்பிடுற நீங்க எப்படி தோத்தீங்கன்னு கேட்டுச்சு

அதுக்கு குரங்கார் சொன்னாரு அரசே போட்டியில எப்பவும் தின்கிற வாழைப்பழத்தையே வச்சதுனால என்னால நிறய திங்க முடியல

ஆனா அதிகம் வாழைப்பழம் சாப்பிடாத மிருகங்கள் போட்டின்னு வந்ததும் விரும்பி அதிகமா தின்னுடுச்சுங்க

எனக்கு வாழைப்பழத்தை பசிக்கு தின்னுதான் பழக்கம் அதனால நான் தோத்துட்டேன்னு சொல்லுச்சு

You can download the தார்மீக கதைகள் | Moral Stories Tamil PDF using the link given below.

2nd Page of தமிழ் கதைகள் சிறுகதைகள் PDF
தமிழ் கதைகள் சிறுகதைகள்

Download link of PDF of தமிழ் கதைகள் சிறுகதைகள்

REPORT THISIf the purchase / download link of தமிழ் கதைகள் சிறுகதைகள் PDF is not working or you feel any other problem with it, please REPORT IT by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If this is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *