Guha Pancharatnam Tamil PDF

Guha Pancharatnam in Tamil PDF download free from the direct link below.

Guha Pancharatnam - Summary

Discover the Guha Pancharatnam: A Spiritual Journey

Experience the divine wisdom of Guha Pancharatnam through its sacred verses. This devotional text is a beautiful expression of faith and reverence, capturing the essence of Lord Murugan, also known as Guha. If you’re looking for a PDF download of the Guha Pancharatnam, you can find it at the link below.

Guha Pancharatnam Lyrics in Tamil

ஓங்கார நக³ரஸ்த²ம் தம் நிக³மாந்த வநேஶ்வரம் ।
நித்யமேகம் ஶிவம் ஶாந்தம் வந்தே³ கு³ஹம் உமாஸுதம் ॥ 1॥

ஓம்கார நகரத்தில் வசிப்பவனும், வேதாந்த வனத்திற்கு ஈசுவரனும், என்றும் உள்ளவனும், ஒன்றேயானவனும், மங்களகரனும், சாந்த வடிவினனும், உமாதேவியின் புத்திரனான குஹனை நமஸ்கரிக்கிறேன்.

வாசாமகோ³சரம் ஸ்கந்த³ம் சிது³த்³யாந-விஹாரிணம் ।
கு³ருமூர்திம் மஹேஶாநம் வந்தே³ கு³ஹம் உமாஸுதம் ॥ 2॥

வாக்கிற்கு எட்டாதவனும், சிவனிடமிருந்து துள்ளி வெளிப்பட்டவனும் சித்தாகிற தோட்டத்தில் ரமிக்கிறவனும், குருமூர்த்தியும் மகேசுவரனும், உமாதேவியின் புத்திரனுமான குஹனை நமஸ்கரிக்கிறேன்.

ஸச்சித³நந்த³ரூபேஶம் ஸம்ஸார-த்⁴வாந்த-தீ³பகம் ।
(ௐ ஶ்ரீ) ஸுப்³ரஹ்மண்யம் அநாத்³யந்தம் வந்தே³ கு³ஹம் உமாஸுதம் ॥ 3॥

சச்சிதானந்த வடிவினனும், சம்சார இருளுக்குத் தீபமானவனும், ஶ்ரீ சுப்ரமண்யனும், ஆதி அநந்தம் இல்லாதவனுமான உமாதேவியின் புத்திரனுமான குஹனை நமஸ்கரிக்கிறேன்.

ஸ்வாமிநாத²ம் த³யாஸிந்து⁴ம் ப⁴வாப்³தே:⁴ தாரகம் ப்ரபு⁴ம் ।
நிஷ்கலங்கம் கு³ணாதீதம் வந்தே³ கு³ஹம் உமாஸுதம் ॥ 4॥

சுவாமிநாதனும், கருணைக்கடலானவனும், சம்சார சாகரத்தைத் தாண்டவைப்பவனும், பிரபுவும், களங்கமற்றவனும் (ஸத்வ, ரஜஸ், தமஸ்) குணங்களுக்கு அப்பால் உள்ளவனும், உமாதேவியின் புத்திரனுமான குகனை நமஸ்கரிக்கிறேன்.

நிராகாரம் நிராதா⁴ரம் நிர்விகாரம் நிராமயம் ।
நிர்த்³வந்த்³வம் ச நிராலம்ப³ம் வந்தே³ கு³ஹம் உமாஸுதம் ॥ 5॥

உருவமில்லாதவனும், எதனாலும் தாக்கப்படாதவனும், ஆனால் அனைத்திற்கும் ஆதாரமானவனும், மாற்றமில்லாதவனும், அழிவற்றவனும், இரண்டாவதாக எதுவும் இல்லாதவனும், (ஏகனும்), பற்றற்றவனும், உமாதேவியின் மைந்தனுமான குகனை நமஸ்கரிக்கிறேன்.

You can download the Guha Pancharatnam PDF using the link given below.

Guha Pancharatnam Tamil PDF Download