Sangathara Tamil Novel PDF

Sangathara Tamil Novel in PDF download free from the direct link below.

Sangathara Tamil Novel - Summary

“Sangathara Tamil Novel” is a captivating story that many readers look forward to exploring. Readers have their own perceptions of characters and themes, and that’s why they connect with the content. In this novel, we see a unique narrative that challenges the typical representations of characters, making it an essential read for those interested in fiction.

Understanding the Characters in Sangathara

என்.டி. ராமராவை போலத்தான் கிருஷ்ணன் இருப்பார்! கே.ஆர். விஜயாவை போல்தான் அம்மன் இருப்பாள்! சிவாஜி கணேசனை போல்தான் கட்டபொம்மன் இருப்பான் – என்று தாங்களாகவே இவர்களை உருவகப்படுத்திக் கொண்டு, உண்மையான இறை சொரூபம் தங்கள் முன் தோன்றினாலும், அவை தங்கள் மனதில் உருவகப்படுத்திக் கொண்ட ரூபங்களுக்கு அப்பாற்பட்டு இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்! அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அம்மன் கே.ஆர். விஜயா போன்று இல்லை என்று நாம் சொன்னால், எதை ஆதாரமாக வைத்து இப்படிக் கூறுகிறீர்கள் என்று நம்மைக் கேட்டால், நாம் என்ன பதில் கூறமுடியும்!

பொன்னியின் செல்வன் படித்து சோழர்குல செம்மல்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று உருவகப்படுத்திக் கொண்டு விட்டவர்கள் பலர்! பத்மினியை குந்தவையாகவும், வைஜெயந்தி மாலாவை நந்தினியாகவும் இருத்தியிருக்கிறேன் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்! வக்கீல் என்றால் வரதாச்சாரி, க்ளப் டான்சர் என்றால் ரீட்டா, அடியாள் என்றால் ஜம்பு என்று தமிழ் திரையுலகம் நமக்கு போதித்து விட்டது! வரதாச்சாரி என்று அடியால் வந்தாலும் ஏற்க மாட்டோம்! ஜம்பு, முனியன் என்று வக்கீல்கள் வந்தாலும் ஏற்க மாட்டோம்! இப்படிப்பட்ட வாசகர்களுக்காக சங்கதாரா எழுதப்படவில்லை.

Plot Summary of Sangathara Tamil Novel

ஆதித்த கரிகாலன் கொலைக்கான காரணம் பற்றிய புத்தகம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புடன் சங்கதாரா என்ற புத்தகத்தை வாங்கி படித்தேன் ஆனால் ஏன் இந்த புத்தகத்தை படித்தோம் என்று ஆகிவிட்டது. புத்தகம் அத்தனை அபத்தமான கற்பனை.

பொன்னியின் செல்வன் கட்டிவித்த மாயா பிம்பத்தை உடைக்கிறேன் என்ற ஒரே முடிவில் பொன்னியின் செல்வனில் புகழப்பட்ட அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் கொச்சை படுத்தி எழுதியுள்ளார் ஆசிரியர் நரசிம்மா என்பதே என் மனதில் படும் எண்ணம்.

புத்தகத்தில் வரும் 1000 அபத்த கற்பனைகளில் ஒன்று உங்கள் கருத்துக்காக சொல்கிறேன். ஆதித்த கரிகாலனை கொன்றது குந்தவை. காரணம் அவரது மகன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக. இதில் கொடுமை என்னவெனில் குந்தவையின் மகன் தான் அருண்மொழி. குந்தவை வந்தியதேவருடன் முன் காலத்தில் கொண்ட தவறான உறவால் பிறந்தவன் தான் அருண்மொழி.

இதற்கு மேல் சங்கதாரா புத்தகத்தை படிக்கவேண்டுமா என்பதை உங்கள் கருத்துக்கு விட்டுவிடுகிறேன்.

You can download the Sangathara Tamil Novel PDF using the link given below.

Sangathara Tamil Novel PDF Download