ஐயப்பன் சரணம் வரிகள் Tamil PDF

ஐயப்பன் சரணம் வரிகள் in Tamil PDF download free from the direct link below.

ஐயப்பன் சரணம் வரிகள் - Summary

Ayyappan, a talented poet, drew inspiration from the struggles of the homeless and penned powerful verses that reflected the raw essence of life. Tragically, he experienced great loss early in life, losing his father at just one year old and his mother at fifteen. His poetry beautifully narrates his experiences, revealing how destitution and insecurity shaped him into the poet he became.

About Ayyappan

Ayyappan was born on October 27, 1949, in Nemom, located in the Thiruvananthapuram district. Throughout his life, he expressed a deep connection to his past, often contemplating the circumstances of his father’s death and the impact it had on his mother. Ayyappan’s life and poetry serve as an open book, reflecting his chaotic journey like a leaf floating in the river of life.

ஐயப்பன் சரணம் வரிகள் – Ayyappan Stanza Lyrics in Tamil

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

அரியாகிய திருமாலின் ஆசிகள் நிறைந்தவர், பேரண்டத்தை இயக்குபவர், அரியின் அருளின் சாராம்சமாக இருக்கும் உமது தெய்வீகப் பாதங்களை வணங்குகிறோம். தீயசிந்தனைகளை அழிக்கும், இந்த அண்டத்தை ஆள்பவர், அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

சரணகீர்த்தனம் பக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலயம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரண் அடைவோரின் பாடலை விரும்புபவர், பக்தர்களின் மனதில் நிறைந்தவர், பக்தர்களை ஆள்பவர், ஆடலை விரும்புபவர். உதிக்கும் சூரியன் போல பிரகாசிப்பவர், உயிர்களின் வேந்தரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

பிரணயசத்யகம் பிராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

உண்மையின் உணர்வாக இருப்பவர், எல்லா உள்ளங்களின் விருப்பமாக இருப்பவர், பேரண்டத்தைப் படைத்தவர், சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவர். ஓம் எனும் மந்திரத்தின் ஆலயம் நீங்கள்; பக்தர்களின் பாடல்களை விரும்புபவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் தேவவர்ணிதம்
குருகிருபாகரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

குதிரையை வாகனமாகக் கொண்டவரே, அழகிய திருஉருவம் கொண்டுள்ளவரே, ஆசிர்வதிக்கப்பட்ட தண்டாயுதத்தை ஏந்துபவர், ஒய்யாரமானவர்; என்னுடைய குரு நீங்கள். பக்தர்களின் பாடல்களை விரும்புபவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்
திரிநயன பிரபும் திவ்யதேசிகம்
திரிதசப்பூஜிதம் சிந்திதப்பிரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

மூவுலகாலும் வணங்கப்படுபவர், கடவுளர்களின் ஆன்மாவாகத் திகழ்பவர், சிவனின் உருவமாக இருப்பவர், தேவர்களால் வணங்கப்படுபவர்; உங்களைத் தினந்தோறும் மூன்றுமுறை வணங்குகிறோம். எங்கள் மனம் நிறைந்தவர் நீங்கள்; அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

பவபயாபகம் பாவுகாவகம்
புவனமோகனம் பூதிபூசணம்
தவளவாகனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

அச்சத்தை அழிப்பவர், செழிப்பை கொணர்பவர், இந்த அண்டத்தை ஆள்பவர், திருநீட்டுடன் அழகு நண்மிக்கை அணிந்து கொண்டு உள்ளவர். வெள்ளை யானையை வாகனமாக கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களபகோமளம் காத்ரமோகனம்
களபகேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

இனிமையான, மிருதுவான புன்முறுவல் உடையவரே, அழகிய திருமுகத்தை உடையவரே, இளமையும், மென்மையும் உடையவர். சொக்க வைக்கும் பேரழகையும், யானை, சிங்கம், குதிரை போன்றவற்றை வாகனமாகவும் கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரிதம்
ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

பக்தர்களால் நேசிக்கப்படுபவர், பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்பவர், வேதங்களால் துதிக்கப்படுபவர், ஞானியரை ஆசிர்வதிப்பவர். வேதங்களின் சாராம்சம் நீங்கள்; தெய்வீக இசையை ரசிப்பவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

You can download the ஐயப்பன் சரணம் வரிகள் PDF using the link given below.

ஐயப்பன் சரணம் வரிகள் Tamil PDF Download