ஐயப்பன் சரணம் வரிகள் Tamil PDF

❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp
REPORT THIS PDF ⚐

ஐயப்பன் சரணம் வரிகள் Tamil

A. Ayyappan, who got intoxicated by the creativity of turning the pain of the homeless into poetry, slept on shop verandas and wrote poems — which were the untainted depictions of life. In his own words, destitution and insecurity transformed him into a poet.

Ayyappan was born on October 27, 1949, in Nemom, in the Thiruvananthapuram district. When he was a year old, he lost his father, and at 15 he lost his mother. Ayyappan, who had said that he was not sure whether his father’s death was a suicide or a murder, wrote in a poem that his mother was pregnant at the time of the suicide. Without saying that his life and his poems were an open book for the world to see, he lived without any order and system, like a leaf floating in the river of life.

ஐயப்பன் சரணம் வரிகள் – Ayyappan Stanza Lyrics in Tamil

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

அரியாகிய திருமாலின் ஆசிகள் நிறைந்தவர், பேரண்டத்தை இயக்குபவர், அரியின் அருளின் சாராம்சமாக இருப்பவர், உமது தெய்வீகப் பாதங்களை வணங்குகிறோம். தீயசிந்தனைகளை அழிப்பவரே, இந்த அண்டத்தை ஆள்பவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

சரணகீர்த்தனம் பக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலயம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரண் அடைவோரின் பாடலை விரும்புபவர், பக்தர்களின் மனதில் நிறைந்தவர், பக்தர்களை ஆள்பவர், ஆடலை விரும்புபவர். உதிக்கும் சூரியன் போல பிரகாசிப்பவரே உயிர்களின் வேந்தரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

பிரணயசத்யகம் பிராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

உண்மையின் உணர்வாக இருப்பவர், எல்லா உள்ளங்களின் விருப்பமாக இருப்பவர், பேரண்டத்தைப் படைத்தவர், சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவர். ஓம் எனும் மந்திரத்தின் ஆலயம் நீங்கள்; பக்தர்களின் பாடல்களை விரும்புபவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் தேவவர்ணிதம்
குருகிருபாகரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

குதிரையை வாகனமாகக் கொண்டவரே, அழகிய திருஉருவம் கொண்டுள்ளவரே, ஆசிர்வதிக்கப்பட்ட தண்டாயுதத்தை ஏந்துபவர், ஒய்யாரமானவர்; என்னுடைய குரு நீங்கள். பக்தர்களின் பாடல்களை விரும்புபவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்
திரிநயன பிரபும் திவ்யதேசிகம்
திரிதசப்பூஜிதம் சிந்திதப்பிரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

மூவுலகாலும் வணங்கப்படுபவர், கடவுளர்களின் ஆன்மாவாகத் திகழ்பவர், சிவனின் உருவமாக இருப்பவர், தேவர்களால் வணங்கப்படுபவர்; உங்களைத் தினந்தோறும் மூன்றுமுறை வணங்குகிறோம். எங்கள் மனம் நிறைந்தவர் நீங்கள்;
அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

பவபயாபகம் பாவுகாவகம்
புவனமோகனம் பூதிபூசணம்
தவளவாகனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

அச்சத்தை அழிப்பவர், செழிப்பை கொணர்பவர், இந்த அண்டத்தை ஆள்பவர், திருநீற்றை ஆபரணமாக அணிந்தவர். வெள்ளை யானையை வாகனமாக கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களபகோமளம் காத்ரமோகனம்
களபகேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

இனிமையான, மிருதுவான புன்முறுவல் உடையவரே, அழகிய திருமுகத்தை உடையவரே, இளமையும், மென்மையும் உடையவர். சொக்க வைக்கும் பேரழகையும், யானை, சிங்கம், குதிரை போன்றவற்றை வாகனமாகவும் கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரிதம்
ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

பக்தர்களால் நேசிக்கப்படுபவர், பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்பவர், வேதங்களால் துதிக்கப்படுபவர், ஞானியரை ஆசிர்வதிப்பவர். வேதங்களின் சாராம்சம் நீங்கள்; தெய்வீக இசையை ரசிப்பவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

You can download the ஐயப்பன் சரணம் வரிகள் PDF using the link given below.

2nd Page of ஐயப்பன் சரணம் வரிகள் PDF
ஐயப்பன் சரணம் வரிகள்

ஐயப்பன் சரணம் வரிகள் PDF Download Free

REPORT THISIf the purchase / download link of ஐயப்பன் சரணம் வரிகள் PDF is not working or you feel any other problem with it, please REPORT IT by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If this is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.